இந்திய நேரம்

மணிவண்ணன்

ABUDHABI

My Photos 04 ஏப்ரல் 2011 Slideshow: Mani’s trip to Abu Dhabi, United Arab Emirates was created by TripAdvisor. See another Abu Dhabi slideshow. Create your own stunning slideshow with our free photo slideshow maker.

புதன், 11 மே, 2011

கணவன் மனைவி ஜோக்ஸ்…











நீ எப்போடீ இந்த புடவை எடுத்தே?
தீபாவளிக்கா? இல்லை பொங்கலுக்கா?
கடைக்காரர் குனிஞ்சுக்கிட்டு பில் போடும் போது.
என் மனைவி கிட்ட எனக்கு பிடிச்சதே அவளோட பொய் சொல்லாத குணம்தான்..
இல்லையே...நேற்றுகூட என் மனைவிகிட்ட 'என் புருஷன் அழகுன்னு' சொன்னாளாமே
மனைவி - பால் எல்லாவற்றையும் பூனை குடிக்கும்வரை என்ன பண் ணிட்டீருந்தீங்க?
கணவன் - இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
மனைவி-(கணவனிடம்)என்ன அநியாயம்..பாருங்க..நம்ம பையன் மேத்ஸ் ஹோம் ஒர்க் சரியா செய்யலைன்னு..உங்கப்பாவை கூட்டிக்கிட்டு வான்னு சொன்னாங்களாம்...நியாயமாப்பார்த்தா...நீங்க தானே உங்கப்பாவை கூட்டிக்கிட்டு போகணும்.
உன் புருஷன் எப்போது சாப்பிட்டாலும் சாப்பாட்டை புகழ்ந்து கொண்டே சாப்பிடுகிறாரே ஏன்?
அது அவரே சமைத்தது அல்லவா
கணவனும் மனைவியும் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தார்கள். அங்கிருந்த
குரங்குகளைப் பார்த்து,
கணவன் : உன்னுடைய சொந்தக்காரங்க இங்கே இருக்காங்க!
மனைவி : ஆமாம். என்னுடைய மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்.
ஏண்டி வீட்டுக்காரர் பயங்கர கஞ்சத்தனம்...
எப்படி...?

தலைக்கு டை அடிச்சா 50 ரூபா செலவு ஆகுதுன்னு ஒரே செலவா கறுப்பு விக் வாக்கி மாட்டிக்கிட்டார்.
என் மனைவி எனக்கு அடங்கி ஒடுங்கி நடக்க நீங்க தான் சாமி அரு ள் புரியணம்
அது முடியாமத்தான் நானே சாமியாராகி விட்டேன் மகனே.
மனைவி: ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க!

கணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்!
தனலட்சுமி விஜயனை மணந்து கொண்டதால அவள் அவனை இலட்ச ரதிபதியா ஆக்கிட்டாள்.
ஓ அப்படியா? தனலட்சுமி வருவதற்கு முன் விஜயன் எப்படி இருந்தான்.
கோடீஸ்வரனாக இருந்தான்...!









தினமும் மாலை 6 மணிக்கு என் வாய்க்கு வந்தபடி மனைவியை திட்டுவேன்
அதென்ன 6 மணி கணக்கு
அப்போதானே அவ ஷாப்பிங்க்னு வெளியே போவா..
எப்போதும் தமிழில் அச்சனை.
எங்கே?
என் வீட்டில்.
என் மனைவி ஒரு மாதம் பிறந்த வீட்டிற்கு போயிருக்கா..
அதுக்கு சந்தொஷப்படாம ..வருத்தப்படறே..
அந்த ஒரு மாசம் இன்னியோட முடியறது.அதுதான்
உங்க வாழ்க்கையிலேயே உங்களுக்கு ரொம்ப பிடித்தமானவரைப் பற்றி கூறுங்க?
அது நிச்சயம் என் மனைவிதான் சார்
அடப் பயப்படாதீங்க சார் உண்மையைச் சொல்லுங்க.
உனக்கும்..உன் மனைவிக்கும் சண்டையா? கடைசிலே என்ன ஆச்சு
நான் கொவிச்சுக்கிட்டு..பிறந்த வீடு வந்துட்டேன்
தமிழரசி : உன் கணவர் உன்னை கண்கலங்காமல் பார்த்துக்கிறாராதா சொல்லி ஆறுவருசமாக ரொம்ப கொடுமை படுத்துறதா சொல்றியே, வெளங்கல

செல்வி : பெரும் ரோதனையாகப் போச்சு, வெங்காயம் உறிச்சா என் கண் கலங்கிவிடுமாம் அதனால் வெங்காயமே வாங்காமல் இந்த ஆறுவருசமாக ஓட்டிட்டார்.
ஊருக்கு போய் சேர்ந்ததும் லெட்டர் போடு கமலா?
ஏங்க?
அப்பதான் எனக்கு முழு சுதந்திரமே கிடைச்சமாதிரி.
ஏண்டி பாத்ரூமை திறந்து வெச்சிட்டே குறிக்கிறே?
யாராவது நான் குளிக்கிறதை எட்டிப் பார்த்தா, யார்னு உடனே கண்டுபிடிச்சிடலாமே...!
கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!

மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி உங்களுக்கு வரும்?
என் மனைவி காபின்னு விஷத்தைக் கொடுத்தாக் கூட நான் குடிச்சிடுவேன்.
அவ்வளவு நம்பிக்கையா?
அவளோட குடும்பம் நடத்துறதை விட சாகறதே மேல்.

Post Comment

1 கருத்துகள்:

விச்சு சொன்னது…

இன்றைய வலைச்சத்தில் தங்களின் பதிவு http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_14.html